பெங்களூருவில் இன்று முதல் முழு ஊரடங்கு!

கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது. 41,581 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 759 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இம்மாநிலத்தில் பெங்களூருவில்தான் பாதிப்பு அதிகம் உள்ளது. பெங்களூருவில் 15,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைள் நடந்து வருகின்றன. இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.

எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த இன்று முதல் (ஜூலை 14-) ஜூலை 21–ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்தார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா.

இந்த ஊரடங்கின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கான கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பெங்களூருவாசிகள் நேற்று கிடைத்த வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x