ஜாக் க்ராலி 267 – பட்லர் 152 பாட்னர்ஷிப்பில் 583/8 வலுவான நிலையில் இங்கிலாந்து- பாகிஸ்தான் 24/3 இழந்து திணறல்….

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்யமுடியும் என்பதால் இந்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு மீகவும் முக்கியம். இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சவுதாம்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 332-4 என்ற வலுவான நிலையில் இருந்தது. களத்தில் ஜாக் க்ராலி 177 ரன்களுடனும் ஜாஸ் பட்லர் 87 ரன்களுடனும் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பாகிஸ்தான் அணி இவர்களின் பாட்னர்ஷிபை தடுக்கமுடியாமல் திணறியது.

சிறப்பாக விளையாடிய ஜாக் க்ராலி 200 ரன்கள் அடித்து அசத்தினார். மறுமுனையில் பட்லர் சதம் அடித்து அசத்தினார். இருவரும் ஐந்தாவது விக்கெட்டிற்கு 359 ரன்கள் குவித்தனர். ஜாக் க்ராலி தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிலையில் 250 ரன்கள் அடித்தார். இந்நிலையில் ஜாக் க்ராலி 267 ரன்கள் அடித்த போது அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பட்லர் 152 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த வோக்ஸ் 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து 583-8 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் தொடக்க வீரர்கள் ஷான் மாசூத் 4 ரன்னிலும் அபித் அலி 1 ரன்னிலும் ஆன்டர்சன் வேகத்தில் வீழ்ந்தனர். பின்னர் களம் இறங்கிய பாபர் ஆஷமும் 11 ரன்னில் ஆன்டர்சனிடம் வீழ்ந்தார். பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 24-3 என்ற நிலையில் இருந்தது.