தேர்தல் தேதிகள் அறிவித்த பின்னரே பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்..!

கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு பள்ளிகளுக்கு 92% மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் தவிர பிற நாட்களில் வாரத்தில் 6 நாட்களுக்கு என பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும், இவர்களுக்கான பாடத்திட்டங்களும் தற்போது குறைப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.