19 வயது காதல் மனைவியை குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் துரு பள்ளியைச் சேர்ந்தவர் காயத்ரி(19). கல்லூரி மாணவியான இவர் சீத்தமாகுள பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவனை (வயது 17) கடந்த 2- ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். இது இருவரின் வீட்டாருக்கும் தெரிய வரவே காயத்ரியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார், மாணவன் சிறுவன் என்பதால் இருவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் காயத்ரிக்கு இரகசியமாக அவர் வீட்டார் திருமணத்திற்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் சந்தித்து பேசி உள்ளனர்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் காயத்ரியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x