மதுரையில் வேகமாக பரவும் டெங்கு – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு டெங்கு பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவனான திருமலேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த மகனான மிருத்தின் ஜெயன் வயது 9 டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.