இந்திய பெண்கள் பாலுணர்வு அற்றவர்கள் – அமெரிக்க முன்னாள் அதிபர் பேச்சு கசிந்தது

அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் உரையாடல்கள் அடங்கிய ரகசிய டேப் சமீபத்தில் வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டது. அதில் இந்திய பெண்கள் உலகிலேயே கவர்ச்சியற்றவர்கள், பாலுணர்வு அற்றவர்கள் என பேசியுள்ளார்.

நிக்சன் அமெரிக்காவின் 37-வது அதிபராக 1969 முதல் 1974 வரை பொறுப்பு வகித்தவர். சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ரகசிய உரையாடல்கள் அடங்கிய டேப், முன்னாள் அதிபர் நிக்சனின் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.இந்த உரையாடல்கள் பற்றி, வரலாற்றாசிரியர் கேரி ஜெ. பாஸ் என்பவர் நியூயார்க் டைம்ஸ் இதழில் கட்டுரை எழுதியுள்ளார். இவர்  The Blood Telegram: Nixon, Kissinger and a forgotten genocide’ என்ற நூலை எழுதியவர்.

ரகசிய உரையாடல்கள் பற்றி பாஸ் கூறியிருப்பதாவது: ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களுடன் இந்தியர்களை ஒப்பிட்டு, அவர்களிடமாவது சிறிதளவு வசீகரம் இருக்கிறது. இந்தியர்கள் பரிதாபகரமானவர்கள் என்றார் நிக்சன். வங்கதேசம் உருவாக காரணமான, 1971 இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, இந்தியா சோவியத் யூனியனுடன் நெருக்கமாக இருந்தது. பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரம் அமெரிக்காவை ஆதரித்து வந்தது.

அதனால் இந்தியர்களுக்கு எதிராக நிக்சன் இருந்தார். பாகிஸ்தானால் நடத்தப்பட்ட வன்முறையை அவர் கண்டுகொள்ளவில்லை. ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான வங்காள மக்கள் கொல்லப்பட்டதை நிக்ஸன் ஆதரித்தார்.

ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களுடன் இந்தியர்களை ஒப்பிட்டு, அவர்களிடமாவது சிறிதளவு வசீகரம் இருக்கிறது. இந்தியர்கள் பரிதாபகரமானவர்கள் என்றார். உலகிலேயே இந்திய பெண்கள்தான் கவர்ச்சி குறைவானவர்கள். பாலுணர்வு அற்றவர்கள். அவர்கள் எப்படி பிள்ளை பெறுகிறார்கள் என்றும் பேசியதாக பாஸ் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x