இந்திய – சீன எல்லையில் பதற்றம் : ராணுவ வீரர்கள் கடும் மோதல்

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய – சீன இராணுவங்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும், எல்லைப் பகுதியில் படைகளைக் குவிந்துள்ளன. 

இதைத் தொடர்ந்து எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இந்தியா-சீனா நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே நேற்று 9ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதற்கிடையே, சிக்கிம் எல்லையில் சீனா இராணுவம் ஊடுருவ முயன்றதாகவும், அதனை இந்திய இராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், எல்லையில் மோதல் நடந்ததை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. 

அண்மையில் சிக்கிமில் உள்ள நாகு லாவில் இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவத்துக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. இருப்பினும் இந்த மோதல் ஏற்கனவே நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படி, அங்கு பணியில் இருந்த ராணுவத்தினராலேயே தீர்க்கப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது சிக்கிமில் பதற்றம் நிலவி வருகிறது. எனினும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x