கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயக்கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அவர் வீடுதிரும்பினார்.
இந்நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால், கொல்கத்தா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.