இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்தவருக்கு உயரிய விருது இல்லை!

லடாகின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் மோதி உயிர் தியாகம் செய்த 20 வீரர்களில் ஒருவர் தெலுங்கானாவை சேர்ந்த, கர்னல் சந்தோஷ் பாபு. அவரின் தியாகத்துக்கு சுதந்திர தினத்தின் போது ‘மஹாவீர் சக்ரா’ விருது வழங்கியது மத்திய அரசு. 

அவ்விருது வழங்கப்பட்டதில் எனக்கு, 100 சதவீத திருப்தி ஏற்படவில்லை என, ராணுவ கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்திரா கூறியுள்ளார். அவருடைய தியாகத்துக்கு, இன்னும் சிறப்பான மரியாதை அளித்திருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, சந்தோஷ் பாபுவுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்கியிருக்க வேண்டும். 

கடுங்குளிரை பொருட்படுத்தாமல், சீன ராணுவத்துடன் தைரியமாக போராடி, பல சீன வீரர்களை கொன்ற பின் தான், என் மகன் உயிர் தியாகம் செய்துள்ளார். சீனாவை விட இந்திய ராணுவம் வலிமையானது என்பதை அவர் உணர்த்தியுள்ளார். ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கு உத்வேகமாக செயல்பட்டுள்ளார். என்று கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x