திருட்டு வழக்கில் சிக்குவோம் என்ற பயத்தில் வாலிபரை எரித்துக் கொன்ற நண்பர்கள்!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருட்டு வழக்கில் கை ரேகை காட்டி கொடுத்து விடும் என்ற பயத்தில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி நண்பர்களே எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

எர்ணாகுளம் புல்லேபடி என்ற இடத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று எரிந்த நிலையில் வாலிபர் சடலம் ஒன்று காணப்பட்டது. சடலத்தின் தலை தண்டவாளத்திலும், உடல் தரையிலும் காணப்பட்டது. மேலும் பெட்ரோல் குப்பி, லைட்டர் ஒன்றும் உடல் அருகில் காணப்பட்டது. பொதுமக்கள் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது. 

கடந்த தினம் அதே பகுதி எளமக்கர என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருட்டு நடந்தது. இது தொடர்பாக போலீசார் டினேய், சுலு, பிரதீப், மணிலால் ஆகிய வாலிபர்களைக் கைது செய்து விசாரனை நடத்தி வந்தனர். விசாரணை இடையே ஜோபி என்ற வாலிபரை கொலை செய்து, எரித்து ரயில் தண்டவாளத்தில் இட்டதும் தெரிய வந்துள்ளது. காரணம் ஜோபியின் விரல் அடையாளம் போலீஸ் கையில் சிக்கியதாகவும், இதனால் அனைவரும் மாட்டி விடுவதாக பயந்து கொலை செய்ததாகக் கூறியுள்ளனர். 

மேலும் திருட்டு நடந்த வீட்டு உரிமையாளர், டினோய் என்பவரின் இரத்த உறவினர் எனவும், அவர்கள் டினோயின் உடன் பிறந்த சகோதரி திருமண நிகழ்ச்சிக்குச் சென்றபோது, டினோய் நண்பர்களுடன் திருட்டு நடத்தியதும் தெரிய வந்தது. எர்ணாகுளம் சென்ட்ரல் போலீசார் அனைவரையும் கைது செய்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x