மாமியாரின் கண்ணை பிடுங்கி எடுத்த மருமகள்..

பீகார் மாநிலம் பர்சா பஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா தேவி. 33 வயதாகும் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் லலிதா தேவியை அவரது மாமியார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குழந்தை இல்லாததை காரணம் காட்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த லலிதா தேவி, தனது மாமியாரின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும், அவரது கண்ணையும் பிடுங்கி எடுத்ததுள்ளார். பின்னர் லலிதா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லலிதா தேவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x