சர்வதேச எல்லைகளை மூட பிரான்ஸ் அரசு உத்தரவு

ஐரோப்பிய நாடான பிரான்சில், உருமாறிய கொரோனா தொற்று பரவும் அச்சத்தில் சர்வதேச எல்லைகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால், இதுவரை 75 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும், 820 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 22,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார். 

தொற்று காரணமாக பிரான்ஸ் வரும் சர்வதேச சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x