7-ம் தேதி சசிகலா தொடங்கப்போகும் யுத்தம் ?

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள சசிகலா வரும் 7-ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். அவர் விடுதலை ஆவதற்கு சில நாட்கள் முன்பாக கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா தொற்று குறைந்த நிலையில் அவர் ஜனவரி 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவர் சென்னை வருவார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவர் பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இளவரசியும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், வரும் 7ம் தேதி இளவராசியுடன் சசிகலா நடராஜன் சென்னை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

சசிகலா அதிமுகவின் முதல்வராக பொறுப்பேற்க முற்பட்டபோது, ஓ.பி.எஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி ’தர்மயுத்தம்’ நடத்தி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். 4 ஆண்டுகள் கழித்து அதே நாளில் ( 
2017, பிப்ரவரி 7 ) சென்னை திரும்பி அதிமுக-வை மீட்கும் போராட்டத்தை கையில் எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அன்றைய தினம் ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே அவர் சென்னை திரும்புவார் என்றும் அதற்காக பெங்களூருவில் இருந்து வழிநெடுகிழும் தொண்டர்கள் படை சூழ அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x