உலக அளவில் கவனம் பெற்ற விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இணைய சேவை துண்டிப்பு, முள்வேலியினாலான தடுப்புகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானாவும், சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்போம் என கருத்து பதிவிட்டனர். இதனால் விவசாயிகள் போராட்டம் உலகளவில் பெரும்விவாத பொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரம் இந்த கருத்துகளுக்கு நடிகை கங்கனா ரணாவத், கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த பிரபரலங்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகியோர் பதில் கருத்து தெரிவித்தனர்.