கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 27). எம்.ஏ. ஆங்கிலம் முடித்துள்ளார். இவருக்கும் சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரவி பாரதி (30) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் திருமணமாகி 3 மாதங்களிலேயே ரவிபாரதி தனது மனைவி மகேஷ்வரியை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுவிட்டார். இதனிடையே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மகேஷ்வரி நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவர், கணவர் வீட்டில் தன்னுடைய கல்லூரி சான்றிதழ்களை வைத்துள்ளார். இதனை ரவிபாரதி, தனது கணவரிடம் கேட்டுள்ளார். 

ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மகேஷ்வரி நேற்று அமானி கொண்டலாம்பட்டிக்கு வந்து கணவர் வீட்டு முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது போலீசாரிடம் அவர், கணவரிடம் இருந்து தன்னுடைய கல்லூரி படிப்பு சான்றிதழ்களை வாங்கி கொடுக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரவிபாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சான்றிதழ்களை வாங்கி மகேஷ்வரியிடம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து கலைந்து சென்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x