கோயில் வாசலில் டயர் எரித்ததால், கோவையில் பரபரப்பு

கோவையில் உள்ள மாகாளியம்மன் கோயில் வாசலில், மர்மநபர்கள் டயர்களை எரித்ததால் விளக்குகள் சேதமடைந்தன. அதேபோல், விநாயகர் கோயிலிலும் பூஜை பொருட்கள் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை, டவுன்ஹால் ரோடு ஐந்து முக்கு எனும் இடத்தில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. மர்ம நபர் ஒருவர், கோயில் வாசலில் டயரை தீ வைத்து எரித்துள்ளார். இதனால், கோயிலில் இருந்த மின் விளக்குகள் சேதமடைந்தன. சூலாயுதத்தையும் வளைத்து சேதப்படுத்தப்பட்டது. சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

அதேபோல், கோவை கவுண்டம்பாளையம் அருகேயுள்ள நல்லாம்பாளையத்தில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. கோயிலுக்குள் நேற்று இரவு வந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த ஆடைகளை எடுத்து தீவைத்து எரித்தனர். மேலும் பூஜை பொருட்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த கோயிலின் பட்டக்காரர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.