ஜன்னல் மேல் உட்கார்ந்து தாயின் உடலை பார்த்த இளைஞன்! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது…

பாலஸ்தீனம் ராம்லா: உயரமாக இருக்கும் ஜன்னல் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டு தன் தாயின் சடலத்தை சோகத்துடன் பார்க்கும் ஒரு இளைஞனின் புகைப்படம் மனதை உடைக்கின்றது .

பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர் ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞர். இவருக்கு 30 வயதாகிறது. அவரின் அம்மா, ரஸ்மி. வயது 73. இவருக்கு சமீபத்தில் கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஹெப்ரான் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பாசமான அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கு ஜிகாத் அல் ஸ்வைட்டி வந்துள்ளார் . ஆனால், அருகிலேயே வரக்கூடாது என்று டாக்டர்கள் ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டனர். இருந்தாலும், அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும் என்று தாய்ப்பாசம் குறையவில்லை.

அங்குமிங்கும் என்று ஒன்றும் புரியாமல் மருத்துவமனையை சுற்றி சுற்றி வந்தார். கடைசியாக யாருக்கும் தெரியாமல், மருத்துவமனையின் உயரமான ஜன்னல் மீதேறி தாயை தூரமாக இருந்து பார்த்து வந்தார். இப்படியோ ஒவ்வொரு இரவும் அந்த இளைஞர் ஜிகாத் அல் ஸ்வைட்டிக்கு கழிந்தது. தினமும் ஜன்னல் மீதேறி கண்ணீர் விட்டு தாயை பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அம்மா இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்டு, கடைசிவரை அம்மாவின் முகத்தை அருகில் சென்று பார்க்க முடியவில்லை என்று அழுதார். இப்போதாவது கிட்டே சென்று பார்த்துக்கொள்கிறேன் என்று கெஞ்சினார் அந்த இளைஞர். ஆனால், டாக்டர்கள் அதற்கு மீண்டும் மறுத்துவிட்டனர்.

வேறுவழியில்லாத அவர், மீண்டும் தன்னுடைய தாயின் உடலை தூரத்திலிருந்தேனும் பார்க்க முடிவுவெடுத்து, ஆஸ்பத்திரி கட்டிடத்தில் உயரமான ஜன்னலில் ஏறி அமர்ந்து, இறந்துபோன அம்மாவின் முகத்தை சோகத்தோடு பார்த்தார்.

இதை ஆஸ்பத்திரியில் இருந்தவர்களே பார்த்து கண்கலங்கி விட்டனர். அதை போட்டோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட அது அனைவரையும் கலங்கடித்து வருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x