மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..?

மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை கடந்த பிப்.,4ம் தேதி 25 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது மேலும் 50 ரூபாய் உயர்ந்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் இது 2வது விலையேற்றமாகும். முன்னதாக பிப்.,4ம் தேதி காஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த விலையேற்றம் இன்று (பிப்.,15) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு காஸ் சிலிண்டர் விலை 785 ரூபாயாகவும், டில்லியில் 769 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x