“மக்களை சந்திக்காத பிரதமரின் வருகை” – கே.எஸ்.அழகிரி தாக்கு

மக்களை சந்திக்காமல் பிரதமரின் வருகை அமைந்திருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 15) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
“ராகுல்காந்தி மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய மூன்று நாட்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இச்சுற்றுப்பயணத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், மீனவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரோடு கலந்துரையாட இருக்கிறார். சில இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். மக்கள் பார்வையில் படாமல் பாதுகாப்பான வாகனத்தில் பயணம் செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ராகுல்காந்தியைப் போல மக்களை சந்திக்காமல் பிரதமரின் வருகை அமைந்திருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.