‘கோ பேக் மோடி’ ; ஓவியா மீது புகார் கொடுத்த பாஜக..

அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்று பதிவு செய்த நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜ சார்பில் சிபிசிஐடியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் அலுவலகத்தில் பாஜ வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.  தமிழகத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி  சென்னைக்கு வந்தார். அப்போது நடிகை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்று பதிவு செய்திருந்தார். இது அவரது டிவிட்டர் கணக்கை பின் தொடர்ந்து வரும் ஏராளமானவர்கள் அந்த பதிவை பார்த்துள்ளனர். மோடி அரசியல் நிகழ்ச்சிக்கு சென்னை வரவில்லை.

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தான் அவர் சென்னை வந்தார். அதோடு இல்லாமல் அவர் அரசியல் குறித்து எந்த கருத்தும் சென்னை பயணத்தின் போது குறிப்பிடவில்லை. அப்படி இருக்க நடிகை ஓவியா திட்டமிட்டு மோடிக்கு எதிராக இந்த பதிவை அவர் போட்டுள்ளார். கடந்த முறை மோடி தமிழகம் வந்த போதும், சமூக ஊடகங்களில் ‘கோ பேக் மோடி’ என்று பதிவு செய்யப்பட்டது. எனவே ஓவியா பதிவு செய்ததற்கு உள்நோக்கம் இருக்கிறது.

அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த மோடிக்கு எதிராக அவர் பதிவு செய்ய என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்று விசாரணை நடத்த வேண்டும். இவரது டிவிட்டர் கணக்கையும் முடக்கி ஐபிசி 124(ஏ), 153(ஏ), 294 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x