ம.பி. பேருந்து விபத்து.. பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

சிதி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

சிதி மாவட்ட காண்காணிப்பாளர் கூறுகையில், “பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42 சடலங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக விபத்தில் சிக்கி கரையிலிருந்த 7 பேரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x