டெல்லியில் வெள்ளம்; நீருக்குள் பேருந்துகள்… டிரைவர் பலி! (வீடியோ)

டெல்லி-என்.சி.ஆரில் இன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து மிண்டோ பாலத்தின் கீழ் இரண்டு பேருந்துகள் நீரில் மூழ்கி ஒரு டிரைவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து, புது டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மிண்டோ பாலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இதில் டிடிசி பேருந்து உட்பட இரண்டு பேருந்துகள் சிக்கிக்கொண்டன.

தீயணைப்புத் துறையினர் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும்போது, மற்றொரு பேருந்தும் மிண்டோ பாலத்தின் கீழ் முழுமையாக நீரில் மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லி, நொய்டா, குர்கான் மற்றும் பிற என்.சி.ஆர் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை நேரத்தில் தொடங்கிய மழை பல பகுதிகளில் வெள்ளத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பா க,இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட டிவீட்டில், டெல்லி மற்றும் என்.சி.ஆர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஹிசார், ஜிந்த், கோஹானா, கன்னூர், பானிபட், ரோஹ்தக், பிவானி, ஜஜ்ஜார், சோனிபட், பாக்பத், குருகிராம், புலந்த்சஹர், காஜியாபாத், ஃபரிதாபாத், பிவாடி ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x