குடியாத்தம், புதுக்கோட்டை நகராட்சியில் 8 நாட்கள் முழு ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், குடியாத்தம் நகராட்சியில் வரும் 24-ம் தேதியிலிருந்து 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, குடியாத்தம் நகராட்சியில் வரும் 24-ம் தேதி முதல், 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது, காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வரும் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. வர்த்தகர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.