ஒடிசாவில் அதிசய மஞ்சள் நிற ஆமை… காரணம் தெரியுமா?
ஒடிசாவில் இருக்கும் பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில் அறிய வகை மஞ்சள் நிறத்திலான ஆமை பிடிபட்டுள்ளது. இது மிகவும் அறிய வகை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பிறழ்வு என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில் பிடிக்கப்பட்ட இந்த ஆமை குறித்து வனத்துறை வார்டன் பானூமித்ரா கூறுகையில், ”ஆமையின் முழு உடலும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இது ஆமைதான். இதுபோன்ற ஆமையை முன்பு நான் பார்த்தது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.