ஸ்வப்னாவின் வங்கி லாக்கரை திறந்து பார்த்து அதிர்ந்த என்.ஐ.ஏ.,

கேரள தங்க கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவின் வங்கி லாக்கரை திறந்த என்.ஐ.ஏ., அதிலிருந்து ஒரு கிலோ தங்கம், ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ரூ.15 கோடி மதிபிலனன 30 கிலோ தங்கத்தை ஜூலை 15-ம் தேதி கேரளாவுக்கு கடத்தினர். இக்கடத்தலில் அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் ஸ்வப்னா உடன் முதல்வர் அலுவலக செயலர் சிவசங்கரன் ஐ.ஏ.எஸ்.,க்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால் இவ்விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. தற்போது சிவசங்கரன் உட்பட அனைவரும் என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் ஸ்வப்னா கணக்கு வந்திருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரை சோதனை நடத்தினர். அதில் 1 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 1 கோடி ரொக்கப்பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x