ராமர் கோவில் பூமி பூஜை ஏற்பாடுகள் யோகி ஆதித்யநாத் ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவிலின் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார்.
அயோத்தியில்,பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தில் ராமர் கோவில் கட்ட, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் அறக்கட்டளையும் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை, உத்தர பிரதேச பா.ஜ.க., அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், ராமர் கோவிலின் பூமி பூஜை அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ராமர் கோவிலின் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார். அப்போது, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து, அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர். முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை முதலமைச்சர் யோகி ஆதித்யாத் வழிபட்டார்.