ரூ.5,600 கோடி திரட்ட அதானி நிறுவனம் எடுத்த முடிவு!

பங்குகளை விற்பனை செய்து, 5,600 கோடி ரூபாய்  திரட்டுவதற்கு அதானி போா்ட்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அதானி போா்ட்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பங்குச் சந்தையில் ரூ.5,600 கோடி மதிப்பிலான பங்குகளை வெளியிட அதானி போா்ட்ஸ் நிறுவனத்தின் நிதிக் குழு முடிவெடுத்துள்ளது. நிறுவனத்தின் கடன்களைத் திருப்பியளிக்கவும் மூலதனத்துக்கான நிதி திரட்டும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கியிடம் போதிய அனுமதி பெறப்பட்டுள்ளது. சிங்கப்பூா் வா்த்தக பங்குச் சந்தையிலும் இந்திய சா்வதேச பங்குச் சந்தையிலும் நிறுவனத்தின் பங்குகள் விரைவில் பட்டியலிடப்படவுள்ளன.

பங்குகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.20 சதவீதம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் வட்டி வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x