ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு

19 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் கோரி சபாநாயகர் அனுப்பிய நோட்டீசிற்கு தடை விதித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் ஜோஷி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சச்சின் பைலட் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சபாநாயகர்அனுப்பிய நோட்டீஸ் மீது ஜூலை 24-ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது ராஜஸ்தான் உயர்நீ்திமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இன்று சபாநாயகர் சி.பி. ஜோஷி , சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் சி.பி. ஜோஷி மனுவை எதிர்த்து எந்த உத்தரவும் பிறக்க கூடாது என சச்சின் பைலட் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இரு தரப்பிலும் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.