லண்டனிலிருந்து தில்லி வந்த 5 பேருக்கு கரோனா.. புதிய வகை கரோனா வைரஸ்??

லண்டனிலிருந்து தில்லி வந்த 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலையொட்டி, அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரிட்டனிலிருந்து தற்காலிக விமான சேவையை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

மேலும் கடந்த சில தினங்களில் பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த விமானங்களில் பயணித்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு லண்டனிலிருந்து தில்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் பயணிகள் 5 பேருக்கும் ஊழியர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மற்ற பயணிகள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர்.

அவர்களுக்கு தொற்று இல்ல என முடிவு வந்தவுடன் வீட்டிற்கு அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x