ராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும்.. ஆட்சிக்கு எதிராக குதிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. திருப்பம்!

ராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட தொடங்கி உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ராஜஸ்தானில் பெரிய அளவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு, ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் திரும்பி உள்ளனர். சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வருகிறார்.
இந்த நிலையில் ராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 15 எம்.எல்.ஏ.க்கள் மாநில காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
அங்கு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்கள் ஹேமந்த் சோரனின் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
ஹேமந்த் சோரனின் ஆட்சியில் தங்களுக்கு சரியான மரியாதை இல்லை என்று இவர்கள் கூறியுள்ளனர். இந்த 15 எம்எல்ஏக்களை மூன்று மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வழிநடாத்துகிறார்கள். அதன்படி இர்பான் அன்சாரி, உமாசங்கர் அகேகா, ராஜேஷ் காஷ்யப் ஆகியோர் இவர்களை வழி நடத்துவதாக கூறப்படுகிறது.
அதேபோல் விவி கொங்கிரி, பூஷன் பாரா, மம்தா தேவி, ஆம்பா பிரசாத், பூர்ணிமா என் சிங் ,ராம் சந்திர சிங் ஆகியோரும் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இவர்கள் திரும்பி உள்ளனர்.