இன்று முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்..!

சென்னையில் ஜன.25-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தண்ணீர் லாரி ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் சென்ற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. எனவே புதிய வாடகையில் ஒப்பந்தம் இடக்கோரி ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சென்னை மாநகர குடிநீர் வாரியம் இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அனைத்து லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
சென்னையில் மொத்தம் 650 ஒப்பந்த தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.