வார இறுதி நாளில் குறைந்த தங்கத்தின் விலை.. இதே நிலை தொடருமா என எதிர்ப்பார்க்கும் வாடிக்கையாளர்கள்!!

நாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த இரு வாரத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனிடையே, இன்று காலை சற்று குறைந்து ஆறுதல் அளித்தது.

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்றைய மாலை நேர வர்த்தகத்திற்கு இறங்குமாகவே இருந்துள்ளது. கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ. 5,385 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.248 சரிந்து ரூ. 43,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று குறைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இதே நிலை வரும் நாட்களிலும் தொடர வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாகவும், விருப்பமாகவும் உள்ளது!

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x