இறுதியாண்டு செமஸ்டர் எழுதாதவர்களுக்கு டிகிரி கிடையாது – சுப்ரீம் கோர்ட்டில் யுஜிசி

கொரோனா தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வு எழுதாதவர்களுக்கு டிகிரி வழங்கப்படாது என யுஜிசி சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளி, கல்லூரி தேர்வுகளை மாநில அரசுகள் ரத்து செய்துள்ளன. ஆனால், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மாநில அரசுகளின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் யுஜிசி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
மாநில அரசுகள் விதிகளை மாற்ற முடியாது. தேர்வுகள் எழுதாதது மாணவர்கள் நலத்திற்கு நல்லதாக அமையாது. இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் விதிகளை மீறியுள்ளன என அவர் வாதாடினார்.