ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவில் 25 வழக்குகள் பதிவு!! 1.54 கோடி ரூபாய் பறிமுதல்..

ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவில் மட்டும் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சூதாட்டங்கள் நடந்தன. 

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவில் மட்டும் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  பெங்களூர் காவல்துறை இணை ஆணையர் சந்தீப் படீல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஐபிஎல் சூதாட்டம் விவகாரம் தொடர்பாக மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 1.54 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x