நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது; பென்னிக்ஸ் குடும்பத்தார் தமிழர்களுக்கு நன்றி

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வரை எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை மொத்தம் ஐந்து சாத்தான்குள காவல்நிலைய போலீசார் அதிரடியாக கைதாகியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பென்னிக்ஸ் சகோதரி, “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்காக குரல் கொடுத்த தமிழர்களுக்கு நன்றி. உலகத்தாருக்கு நன்றி. நாங்கள் நீதிமன்றத்தை நம்பியிருக்கிறோம். இந்த காவலர்கள் தண்டிக்கப்படும்வரை நாங்கள் போராடுவோம். இந்த வழக்கில் மேலும் பலர் உள்ளனர். அவர்களையும் கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, காவலர்கள் கைதான செய்தியை அறிந்த சாத்தான்குளம் அருகிலுள்ள நெடுங்குள மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x