பி.ஜே.பி., – ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப்: ராகுல் காந்தி ‘பகீர்’
இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பி.ஜே.பி.,யும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு:
இந்தியாவில், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பி.ஜே.பி.,யும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதன் மூலம், தவறான தகவல்களைப் பரப்பி, நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டுகின்றன. இறுதியாக, பேஸ்புக் பற்றிய உண்மையை அமெரிக்க ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுடன், அமெரிக்க நாளிதழில் வெளியான செய்தியையும் ராகுல் காந்தி இணைத்து பதிவிட்டுள்ளார்.