தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி?

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருகிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. குறிப்பாக, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதில், கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்களில் நாடுமுழுவதும் சுமார் 175 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்தியாவிலேயே அதிக மருத்துவர் உயிரிழந்ததுள்ளது தமிழகத்தில்தான்.
தமிழகத்தில் மட்டும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும் குஜராத்தில் 20 மருத்துவர்களும் உயிர் இழந்துள்ளனர்.