இந்தியாவில் ஒரே நாளில் 1,65,714 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி..!

இந்தியாவில் உலகின் மிக மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 165714 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த தொடங்கி உள்ளனர். இந்தியாவில் சில வாரங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடந்தது. ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகாலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக துவக்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் இன்று ஒரே நாளில் 165714 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் ஆந்திராவில் அதிகபட்சமாக 16963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மகாராஸ்டிராவில் 15727 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x