கொரோனாவுக்கே தண்ணீர் காட்டிய இந்திய மாநிலம்…!

நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொரோனா, கொடூரமாக பரவி நிலையில், கொரோனா இல்லா மாநிலமாக மிசோரம் சாதனை படைத்துள்ளது.

நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி உயிர்களை குடித்து வரும் கொரோனாவிற்கு இந்தியாவில் தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 55,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 7,548,238 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,14,642 பேர் உயிரிழந்து உள்ளனர், 773,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6,659,895 பேர் குணமடைந்துள்ளனர்.

இப்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் என்று இருக்கின்ற சந்து பொந்துகளில் எல்லாம் முகாமிட்டுள்ள கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்ட முடியாத மாநிலமாக மிசோரம் திகழ்கிறது.

மிசோரம் மாநிலத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் மிசோரமில் 2,253 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது வரை தொற்றால் இதுவரை யாரும் இறக்கவில்லை. மேலும் அதன் பரவலும் அங்கு குறைவாகவே உள்ளது.

முக கவசம் மற்றும் கண்டிப்பான இடைவெளி முறையை மக்கள்  கடைபிடித்து வருகின்றனர். அரசு மற்றும் மக்களின் கூட்டு முயற்சியால் இதுவரை தொற்று ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x