“தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜ கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது” – கே.பாலகிருஷ்ணன்

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜ கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் யாத்திரை’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

பாஜவின் சில நிர்வாகிகளே தங்கள் வீட்டில் குண்டு எறிந்து சிறுபான்மை மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனவே போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியது என இவர்களுடைய வரலாறு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதும், அந்தப் பழியை இதர இயக்கங்கள் மீது திணிப்பதுமாகவே இருந்து வந்திருக்கிறது.

கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலத்தில் யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரசாரத்தை பரப்புவதோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடும்.

எனவே, கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x