மோசடி அழைப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூகுள் வழங்கும் புதிய தொழில்நுட்பம்!

தேடுபொறி அதாவது search engine நிறுவனமான கூகுள் தனது பயனாளர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் தனது தொலைபேசி பயன்பாட்டில் சரிபார்க்கப்பட்ட அழைப்புகள் என்ற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.

மோசடியான அழைப்புகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இந்தியா உட்பட அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெளிவருகின்றன.

‘சரிபார்க்கப்பட்ட அழைப்புகள்’ மூலம் அழைப்பவரின் பெயர், புகைப்படம், அழைப்பின் காரணம் மற்றும் கூகுள் அங்கீகரிக்கப்பட்டதைக் குறிக்கும் சரிபார்ப்பு சின்னம் ஆகியவை இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுல் நிறுவனம் “இது ஒரு பாதுகாப்பு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சரிபார்ப்பிற்குப் பிறகு எந்தத் தகவலையும் கூகிள் சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ செய்யாது” என்று அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x