“ஆணவத்துடனும், பிளவுபடுத்தும் தன்மையுடனும் இந்த மோடி அரசு செயல்படுகிறது..” – சசி தரூர் விமர்சனம்

இந்தியா 1991-ம் ஆண்டில் மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தது. பி.வி.நரசிம்மராவ் என்ற அந்தச் சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவர்தான், நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு சென்றவர்’’ என்றார் சசி தரூர்.

நரசிம்மராவ் மற்றும் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், “நரசிம்மராவ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் காலத்தில் அண்டை நாடுகளை அமைதியாகவும், புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் தாழ்மையாகவும் அணுகினார். ஆனால், தற்போது ஆணவத்துடனும் பிளவுபடுத்தும் தன்மையுடனும் இந்த அரசு செயல்படுகிறது’’ என்றார். மேலும், “ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என நரசிம்மராவ் எண்ணினால், எதுவுமே மாறாதது என்பதுபோல் மென்மையாக அந்த விஷயத்தை மாற்றிக்காட்டும் திறன் படைத்தவர்’’ என்றும் சசி தரூர் பாராட்டினார்.

இந்த கருத்தரங்கில் குழுத் தலைவர் ஜே.கீதா ரெட்டி, டிபிசிசி தலைவர் மற்றும் என்.உத்தும்குமார் ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், தெலங்கானா பொறுப்பாளர் குந்தியா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x