இந்து கோயிலை காக்க மனித அரணாக மாறிய முஸ்லிம் இளைஞர்கள்!

பெங்களூருவில் நடந்த கலவரத்தின் போது அப்பகுதியில் இருந்த ஹனுமன் கோயிலை கலவரக்காரர்கள் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக முஸ்லிம் இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்துள்ளனர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீநிவாசமூர்த்தி நபிகள் நாயகம் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் வன்முறை ஏற்பட்டது. புலிகேசிநகர், பாரதிநகர், உள்ளிட்ட தெருக்களில், வன்முறையாளர்கள் சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். கடைகளை வலுக்கட்டாயமாக மூடச் செய்தனர்.
சுமார் 5 மணி நேரம் கலவரம் நீடித்த கலவரத்தை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தில் கலைத்தனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் டிஜி ஹலி பகுதியில், ஷமபுரா பிரதான சாலையில் அனுமன் கோயில் உள்ளது.
கலவரக்காரர்கள் அப்பகுதிக்கு வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்து கோவிலுக்கு பாதுகாப்பு அளித்தனர். இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பாதுகாப்புக்கு நின்றதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.