தனது நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ‘சீரம்’ சி.இ.ஓ

கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா, தனது நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். 

இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா, உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெற இந்திய மக்களுக்கு, வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

மேலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியில் தனது நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அதன் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்த, தான் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x