அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை – ஸ்டாலின் விமர்சனம்

தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய துரைராஜ் என்ற ரவுடியை காவல் துறையினர் பிடிக்கச் சென்ற போது நாட்டு வெடிகுண்டுகளை வீசினான். இதில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். இந்த மோதலில் ரவுடி துரைராஜும் கொல்லப்பட்டார்.

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திறகு முதல்வர் பழனிசாமி நேற்று ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்தார். அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என்றார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பின்வரும் டிவீட்டினை வெளியிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x