“சுஷாந்த் சிங் மரணத்தை பாஜ அரசியலாக்குகிறது!! இதுதான் பிரதமர் மோடி, பாஜவின் தரம் தாழ்ந்த புதிய இந்தியா” – காங். குற்றச்சாட்டு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை பாஜ அரசியலாக்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பீகாரை பூர்வீகமாக கொண்ட பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் ஊடக தலைமை தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பீகார் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, நடிகர் சுஷாந்தின் மரணத்தை பாஜ அரசியலாக்குகிறது. இதுதான் பிரதமர் மோடி, பாஜவின் தரம் தாழ்ந்த புதிய இந்தியாவாகும். பீகார் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடும் துயரத்தின் பிடியில் உள்ள நிலையில், மாநிலத்தின் துயரை துடைக்காமல் மத்திய அரசு அதன் பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.