கொரோனா தொற்றால் கோவையில் 6 காவல் நிலையங்கள் மூடல்!

கோவையில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. போலீசாருக்கு தொற்று ஏற்படுவதால், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் சுகாதார பணியாளர்களுக்கு பிறகு போலீசார் அதிகளவில் தொற்றுக்கு ஆளாகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், போத்தனூர், குனியமுத்தூர், துடியலூர், சூலூர் மற்றும் உக்கடம் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானது. அவர்கள் பணிபுரிந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் மூன்று போலீசாருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x