வீசியெரிந்த பையில் மாங்கல்யம்!! குப்பைக்கிடங்கில் கண்டுபிடிப்பு..

பண்டிகை நாட்களில் வீட்டை சுத்தம்செய்வது வழக்கம். அப்படி தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதாகக் கூறி ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை குப்பையில் வீசிய பெண் பல போராட்டங்களுக்குப் பிறகு நகையை மீட்டுள்ளார்.

புனேவில் பிம்பிள் சௌதாகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரேகா செலுகார். இவர் தீபாவளியை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த பழைய பொருட்களையெல்லாம் எடுத்து வெளியே வீசும்போது நீண்ட நாட்களாக கிடந்த ஒரு பழைய ஹேண்ட் பேக்கையும் தூக்கி வீசியிருக்கிறார்.

வீசிய இரண்டு மணிநேரத்திற்கு பின்புதான் தான் ஆண்டாண்டு காலமாக பாதுகாத்து வைத்திருந்த மாங்கல்யம், வெள்ளி கொலுசு உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை அந்த பையில் வைத்திருந்தது அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது.

உடனே சஞ்சய் குட்டே என்ற உள்ளூர் சமூக சேவகரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். உடனே அவர் பிசிஎம்சி சுகாதார துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனடியாக ரேகாவின் குடும்பத்தினர் குப்பைக் கிடங்கிற்குச் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த ஊழியர்கள் குப்பையை சுமந்துசென்ற வாகனத்தை சோதனையிட சென்றபோதுதான் அனைத்துக் குப்பைகளையும் கிடங்கிற்கு கொண்டு சென்றது தெரிய வந்திருக்கிறது.

சுகாதாரத் துறை இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவலை வைத்து, டெப்போவின் தரவு ஆய்வாளர் எந்த கிடங்கில் இருக்கும் என தோராயமாகக் கூறியிருக்கிறார். அவர் கூறியபடி தேடிப் பார்த்தபோது, கடைசியாக அந்த ஹேண்ட் பேக் கிடைத்திருக்கிறது. ரேகாவின் குடும்பம் சுகாதாரத் துறைக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

விழாக்காலங்களில் சுத்தம் செய்யும்போது எது தேவையானது, எது தேவையற்றது என்பதை முடிவுசெய்து பின்பு சுத்தம் செய்யவேண்டும். தேவையற்றது என்றாலும் ஒருமுறை சோதித்துப் பார்த்துவிட்டு பின்பு அப்புறப்படுத்துவது நல்லது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x