ஒரே வாரத்தில் 50,000 பேர் விண்ணப்பம்!!!

தமிழக அரசின் தனியார் வேலை இணையதலத்தில் ஒரே வாரத்தில் 50,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதேநேரம் ஊரடங்கால் மூடப்பட்ட நிறுவனங்கள், தற்போதுதான் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஆனால் நிறுவனங்களில் போதிய ஊழியர்கள் இல்லை.இதனை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இணைப்பு பாலமாக இருக்கும் வகையில், தமிழ்நாடு தனியார் துறை வேலை என்ற இணையதளத்தை ஒரு வாரத்திற்கு முன் தமிழக அரசு தொடங்கியது.
இந்த இணைய பக்கத்தில் 37 துறைகளைச் சேர்ந்த 1367 நிறுவனங்களில் 15,000 பணி இடங்கள் இருப்பதாக பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.