“நவம்பர் 1 முதல் கோவில்களை திறக்க வேண்டும்; இல்லையெனில் பூட்டுகளை உடைப்போம்” – பா.ஜ. துஷார் போசல்

நவம்பர் 1ஆம் தேதி முதல் கோவில்களைத் திறக்காவிட்டால் அதன் பூட்டுகளை உடைத்து கோவிலுக்குள் நுழைவோம் என மகாராஷ்டிர பாஜக தலைவர் துஷார் போசல் தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மகாராஷ்ரிடத்தில் தளர்வுகளுடன் பல்வேறு தொழில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அம்மாநில அரசு அனுமதியளிக்கவில்லை.

இதுதொடர்பாக மாநில ஆளுநருக்கும், முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும் இடையே மோதல் வெடித்தபோதும் கரோனா தொற்று பரவலால் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பது சாத்தியமில்லை என மாநில அரசுத் தெரிவித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர பாஜக தலைவர் போசல், “நாங்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்து மாநிலத்தில் கோவில்களைத் திறக்கக் கோரியுள்ளோம். நவம்பர் 1 முதல் கோவில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்காவிட்டால் கோவில்களின் பூட்டுகளை உடைப்போம்” எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 16 லட்சத்து 54 ஆயிரத்து 28 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x